...
செய்திகள்

அக்கரபத்தனை கிலாஸ்கோ தழிழ் வித்தியாலய குறைபாடுகளை சீர் செய்ய உத்தரவு

டி.சந்ரு

அக்கரபத்தனை கிலாஸ்கோ தழிழ் வித்தியாலயத்ததிற்கு நேரடியாக விஜயத்தை மேற்கொண்ட
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த பாடசாலையின் குறைபாடுகளை
ஆராய்ந்ததோடு ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிடத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக
தொகை மதிப்பீடு செய்து விரைவில் சமர்ப்பிக்குமாறு மனிதவள அபிவிருத்தி
நிதியத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன் போது இ.தொ.காவின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண
சபை உறுப்பினர் சக்திவேல், அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ்
மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen