செய்திகள்

அக்கரபத்தனை நகரில் சத்தியேந்திரா தொடர்ந்தும் 108 மணித்தியாலயங்கள் போராட்டம்!

1000ரூபா அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி தனி ஒருவரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கடந்த 05 ஆம்(05.01.2019) திகதியிலிருந்து 108 மணித்தியாலம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

போராட்டத்தை மேற்கொண்டு இருக்கும் அக்கரபத்தனை கிளாஸ்கோ தோட்டத்தை சேர்ந்த எஸ்.சத்தியேந்திரா இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கூட்டு ஒப்பந்தம் காலாவதி ஆகுமுன்) அக்கரபத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும், அதன் பின் அக்கரபத்தனையில் இருந்து தமது உடலங்களில் 1008 வேல் களைப் பூட்டி கால்நடையாக கொழும்பு சென்று ஜனாதிபதி மாளிகையில் 1000/=சம்பள விடயம் கோரிக்கையை சமர்ப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

31 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button