அக்கரபத்தனை பகுதிகளில் பஸ் கட்டணங்கள் அதிகமாக அறவிடப்படுவதாக பயணிகள் விசனம்
ஹட்டன், அக்கரபத்தனை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக அறவிடப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
அண்மையில் அரசாங்கம் மற்றும் பஸ் உரிமையாளர்களின் சங்கம் ஆகியன எரிபொருள் அதிகரித்த பின்பு பஸ் கட்டணங்களில் மாற்றத்தை கொண்டு வந்தனர்.
இந்த கட்டண மாற்றங்களுக்கு பிறகு மலையகத்தின் சில இடங்களில் முறையற்ற விதத்தில் பயணிகளிடம் பஸ் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், இதனால் பயணிகளுக்கும் பஸ் நடத்துனருக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக டயகமயிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பஸ்களில் அக்கரபத்தனையிலிருந்து ஹட்டனுக்கு முன்னர் 62/= அறவிடப்பட்டது.தற்போதைய 12%உயர்வின் படி 70/= அறவிடப்படவேண்டும். எனினும் சில தனியார் பஸ்களில் 75/=வரை அறவிடப்படுகிறது.மேலும் குறித்த வழியில் செல்லும்
பஸ்களில் பயண சீட்டுக்களும் வழங்கப்படுமில்லை. முரண்பாடான இந்த பஸ் கட்டணங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அருல் செல்வம்