அக்கரபத்தனை மண்ராசி பிரதேச வைத்தியசாலைக்கு சமூக ஆர்வலர்களின் முயற்சியில் ஒரு தொகை மருந்து
அருள்செல்வம்

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அக்கரபத்தனை பிரதேசமும் முக்கியமானது.இந்தப் பிரதேச மக்களுக்கு சுகாதார வைத்திய சேவையை வழங்கி வரும் அக்கரபத்தனை(மண்ராசி)) பிரதேச வைத்திய சாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக சாதாரண காயங்களுக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாமல் இருப்பதை கவனத்திற் கொண்டு
சமூக ஆர்வலர்களின் முயற்சியில் ஒரு தொகை மருந்து வகைகள் இன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது .
எரிபொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் முச்சக்கர வண்டிகளுக்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து அலைந்து திரிந்து மருந்து கட்ட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
மருந்து தட்டுப்பாடு என்பது அக்கரபத்தனை வைத்திய சாலையில் மட்டுமல்ல நாட்டில் பொதுவாக இன்று ஏற்பட்டிருக்கக்கூடிய ஒன்றுதான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.எனினும் எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய இவ்வாறான காயங்களுக்கு கூட மருந்து இல்லை என்பதும் அதனால் சாதாரண மக்கள் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகள் என்பதும் இலகுவானதல்ல.
இதனை கருத்தில் கொண்டு சமூகசெயற்பாட்டாளர் அ.ரெ.அருட்செல்வம் கனடாவில்
இயங்கக்கூடிய அறக்கட்டளை அமைப்போடு தொடர்பு கொண்டு மூன்று இலட்சம் ரூபாய்க்கு பெறுமதியான மருந்துப் பொருட்களை பெற்ற தந்திருந்தார்.
அதனை உத்தியோகப் பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இயன்றைய தினம் இடம்பெற்றது.நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் திரு.பிரதீபா
வைத்தியசாலை தாதியர் சேவை பிரிவு அதிகாரி திரு.லலித், அக்கரபத்தனை காவல்துறை நிலைய உதவி பொறுப்பாளர்
(IP)விஜயவர்த்தன மற்றும் உத்தியோகத்தர்களான துளசிகுமார்,மதிவதனன்
நு/லோவகிரன்லி தவி அதிபர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மருந்து வகைகளை அறக்கட்டளை அமைப்போடு பெற்றுத்தர உதவிய நண்பி
திருமதி இலங்கோ மற்றும் கொழுபில் இருந்து இதற்கான மேலதிக உதவிகளை வழங்கிய வோர்ஜிகா நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ்,
தம்பி நிரோஷன்,ஆஸ்பத்திரி சுகாதார ஊழியர் ஹரி உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்.