மலையகம்
அக்கரப்பத்தனையில் வெள்ள பெருக்கு: மக்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையிலல் அக்கரப்பத்தனை, ஆடலி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆடலி தோட்டத்தில் பகுதியில் கடும் மழை பெய்துள்ளது.இதன் காரணமாக இந்த பகுதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் மாலை வேலையில் அதிக மழை பெய்தமையினால் குடியிறுப்புகளின் அருகில் இருந்த ஓடை பெருக்கெடுத்துள்ளதுடன், வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கு தெரிக்கப்பட்டதை தொடர்ந்த தோட்ட முகாமையாளர் நேரில் சென்று பார்வையிட்டதோடு ஓடையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.