மலையகம்
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் -மலையக சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி
மலையக சிறுவர்களை பாதுகாப்போம் என தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று அக்கறப்பத்தனை பிரதேசத்தை சார்ந்த இளைஞர்களால் இன்று நண்பகல் முன்னெடுக்கப்படவுள்ளது.
தலவாக்கலையில் இடம் பெற்ற சம்பவம் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நிலையில், மலையக சிறுவர்களை பாதுகாப்போம் என்றும் மக்களுக்கு சிறுவர்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேரணியை முன்னெடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.