செய்திகள்விளையாட்டு

அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்.!

காலனித்துவ காலத்திலிருந்து 202 ஆண்டுகளாக இருந்த இலங்கைக்கே உரித்தான அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தடை நீக்கப்பட்ட பின்னர் அங்கம்பொர தற்பாதுகாப்பு கலையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒரு தேசிய விளையாட்டாக பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்நாட்டின் பாரம்பரிய அங்கம்பொர தற்காப்பு கலை, 1818 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலனித்துவக் காலத்தில் ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டது.

அத்துடன், அங்கம்பொர தற்காப்புக் கலைகளை கற்பிக்கும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து தேசிய அளவில் விளையாட்டைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button