செய்திகள்

அங்கவீனமுற்ற நபர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!

அங்கவீனமுற்ற நபர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் முகமாக Voice சம்மேளனத்தின் தலைமையில் சமூக அடிப்படையிலான வளர்ச்சி (CBID) நிகழ்ச்சித்திட்டம்- பாகம் II ற்கான அறிமுக நிகழ்வும் மற்றும் சமூக நலன் கருதி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய ஒன்றிணைந்த வேலை திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசங்க அதிபர், நுவரெலியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர், கொத்மலை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவனங்களான Child Fund நிறுவனத்தின் முகாமைத்துவ உத்தியோகத்தர், Voice Area Federation பணிப்பாளர், World vision, Save the children, Palm Foundation, T field, W.D.C, மற்றும் சுய உதவி குழு அங்கத்தவர்கள் என்போர் நிகழ்விலே பங்குபற்றி தங்களின் பங்களிப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தார்கள் தங்களது நிகழ்ச்சித் திட்டம் பற்றிய அறிமுகத்தையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றும் சேவையிணையும் அனைவர் முன்னிலையிலும் தெளிவுபடுத்தினர். இறுதியாக அங்கவீனமுற்ற நபர்களின் சமூகத்துக்கு அனைவரும் ஒன்றுபட செயல்படுவோம் என்ற எண்ணக்கருவோடு இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

– டி சந்ரு

Related Articles

Back to top button