செய்திகள்

அங்கொட லொக்காவின் உதவியாளர் முல்லேரியாவில் கஞ்சாவுடன் கைது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் முல்லேரியா, அங்கொட பகுதியில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசமிருந்து 1 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button