...
செய்திகள்பதுளைமலையகம்

அசாதாரண சூழ்நிலைக் காரணமாக கற்றலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம்.

பேரிடர் மேலாண்மைக்கான ஆசியா பசுபிக் அமைப்பினர் முன்னெடுக்கும் (asia pacific alliance for disaster management) கொவீட் தொற்று அசாதாரண சூழ்நிலைக் காரணமாக கற்றலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் கற்றல் சந்தர்ப்பத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ‘புத்துயிர் பெறும் கல்வி’ செயற்றிட்டத்தின் ஊடாக; பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம், கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலை, நமுனுகுல – பிங்கராவ தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் கற்கின்ற
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றில் தோற்றவுள்ள
மாணவர்களுக்கான பெறுமதிமிக்க
கற்றல் வழிகாட்டல் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பணிப்பாளர் பர்ஷான் ஹாசிம் அதிபர்கள் வீ.எம்.சந்திரசேகரன், எஸ். ரமேஷ், ரீ.முத்துகுமார் ஆகியோரும், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen