செய்திகள்

அசாத் சாலியின் பிணை நிராகரிப்பு.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவருக்கு பிணைக் கோரி, அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் கொழும்பு பிரதம நீதிவானினால் நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button