செய்திகள்

அசேல சம்பத் பிணையில் விடுதலை.!

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

Related Articles

Back to top button