உலகம்செய்திகள்

அச்சத்தில் பாகிஸ்தான் .!

பாகிஸ்தானில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,828 பேர் பாதிக்கப்பட்டதோடு 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை அந்நாட்டில் 971,304 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22,555 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 912,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச வைத்தியசாலை ஊழியர்களுக்கு சுகாதார இடர் காலக் கொடுப்பனவு வழங்கவும் சுகாதார அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

Related Articles

Back to top button