அரசியல்

அச்சமான சூழ்நிலையை மாற்றுவதற்கு பாரிய தியாகங்களைச் செய்தோம் – மஹிந்த

நாட்டில் நிலவிய அச்சமான சூழ்நிலை போக்குவதற்கு பாரிய தியாகங்களை செய்ய வேண்டியிருந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

89ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போதான அச்சமான நிலைமையையும்,யுத்தத்தின் போதான நிலைமையையும் நாம் மறந்துவிட வில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

அந்தக் காலத்தில் தாம் செய்ததை மக்கள் தற்போது மறந்த செயற்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அடுத்த தலைமைமுறையினருக்கு இவை நினைவில் இருக்க வேண்டுமெனில் புத்தகங்களுடாக மட்டுதான் அது முடியுமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் இருந்து நாம் மிகவும் துன்பப்பட்டே தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும் இவற்றை நாம் நினைவில் வைத்து செயற்படவேண்டும எனவும் எதிர்ட்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download