செய்திகள்

அஜித் ரோஹண உட்பட 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

இலங்கை பொலிஸில் 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று முதல் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் இந்த இடமாற்றங்கள் சேவைகளின் அடிப்படையில் செய்யப்பட்டன.

இதற்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்த முனசிங்க நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவியல் மற்றும் வாகன பிரிவிற்குப் பொறுப்பாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.எஸ். பத்திநாயக்க பிரஜைக் பொலிஸ் மற்றும் சுற்றாடல் பிரிவுக்கும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.எம்.தர்மரத்ன மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாகவும், வடமத்திய மாகாணத்துக்கான பதில் பொறுப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.கே.ஜயலத் வடமாகாணத்துக்குப் பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பாகவும், ஊவா மாகாணத்துக்கான பதில் பொறுப்பதிகாரியாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எல்.கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்துக்குப் பொறுப்பாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.டீ.ஆர்.எம். தமிந்த மாற்றப்பட்டுள்ளதுடன், பிரதி பொலிஸ்மா அதிபர் என்.எல். விஜேசேன, அனுராதபுர மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button