செய்திகள்

அடுத்து எந்தெந்த மாவட்டங்களுக்கு கொவிட் தடுப்பூசி.? வெளியானது தகவல்..!

கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஜூன் 8 ஆம் திகதி முதல் மேலும் 12 மாவட்டங்களில் முன்னெடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்ட, பதுளை, அநுராதபுர, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகல மற்றும் பொலன்னறுவ ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடு பூராகவும் உள்ள 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அத்தோடு இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 2.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 5.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அத்தோடு 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 3.3 மில்லியன் மக்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மேலும் குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com