செய்திகள்

அடுத்த சில வாரங்களுக்கு ஒன்றாகப் பயணிக்க வேண்டாம் – புலனாய்வு எச்சரிக்கை

அடுத்த சில வாரங்களுக்கு ஒன்றாகப் பயணிக்க வேண்டாமென நாட்டின் தலைவர்களுக்கு புலனாய்வு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச புலனாய்வுச்சேவையிடமிருந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடமிருந்து மேலும் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் அமைந்துள்ள மதஸ்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், இந்த எச்சரிக்கைத் தகவலூடாக நாட்டின் தலைவர்களிடம் கோரப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுச்சேவையினர் இந்த எச்சரிக்கைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கே வழங்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com