அரசியல்

அடுத்த ஜனாதிபதியை தென்பகுதி மக்களே தீர்மானிப்பர் – விமல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை கம்பஹா,குருணாகல், கண்டி மற்றும் கொழும்பு வாழ் மக்களே தீர்மானிப்பார்கள் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ச தெரிவித்தார்.

இந்த நான்கு மாவட்டங்களிலும் வெற்றி பெரும் நபரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் தற்போது தமது ஒரே எதிர்ப்பார்ப்பாக காணப்படுவதாகவும் இம்முறையும் இதனை தவற விடும் பட்சத்தில் நிச்சயமாக நாட்டுக்கும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வெற்றி எமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகவே பதிவாகும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
image download