உலகம்செய்திகள்

புதிய உருமாறிய லெம்டா… டெல்டா வகையைவிட கொடூரமானது.!

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், டெல்டா வகையைவிட லெம்டா வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாகத் தாக்குவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. லெம்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

லெம்டா கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button