செய்திகள்

அடுத்த வருடத்தின் முதல் பாராளுமன்ற அமர்வு எப்போது ? தகவல் உள்ளே.

2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற சபை அமர்வை எதிர்வரும் ஐந்தாம் திகதி
செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் அடுத்த வருடத்துக்கான பாராளுமன்ற அமர்வில் ஊடகவியலாளர்களும்
கலந்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஊடகப்பிரிவினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த
விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று இடம்பெற்ற
பாராளுமன்ற அலுவல்கள் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதன்பிரகாரம் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து எட்டாம் திகதிவரை சபை
நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வில் கலந்துக் கொள்ளும் ஊடகவியலாளர்கள் சுகாதார தரப்பினரால்
வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொவிட் தொற்றுக்குள்ளான ஒரு ஊடகவியலாளர் பாராளுமன்ற செய்தி
சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களின் பங்குபற்றுதலின்றி பாராளுமன்ற சபை அமர்வுகள்
முன்னெடுக்கப்பட்டதுடன் , ஊடகவியலாளர்கள் அற்ற நிலையில் வரவு செலவு திட்டம்
நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com