கல்விசெய்திகள்

அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 60 வீதம் நிறைவு

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் 60 வீதமானவை நிறைவடைந்துள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவிக்கின்றது.

இம்முறை 40 மில்லியன் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கபடுவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்மரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரைக்கும் 443 வகை பாடப்புத்தகங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்காக மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button