செய்திகள்

அடுத்த வருடத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு .

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

எஹெலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை மற்றும் பாக்கின் விலை தற்போதைய நிலையில் அதிகரித்து காணப்படுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதன் மூலம் மேற்குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய அரசாங்கத்தில் வரிச்சுமை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் அவற்றின் பலன்களை பெற இன்னும் ஓரிரு வாரங்கள் செல்லும் எனவும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என்றும் கடந்த அரசாங்கத்தில் கடன்சுமை அதிகரித்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button