செய்திகள்

அடையாள அட்டை அற்றோருக்கு விஷேட அடையாள அட்டை

ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்பொழுதுள்ள தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டிராதவர்களுக்கு இந்த தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது இந்த தற்காலிக அடையாள அட்டையானது வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த தற்காலிக அடையாள அட்டை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button