...
நுவரெலியாமலையகம்

அட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” திறந்து வைப்பு!

ஜனாதிபதி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு சுபீட்சத்தின் நோக்க இலக்குகளை அடையும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட அட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதேவேளை, அட்டன் டிக்கோயா நகரசபை நிதியில் புனரமைக்கப்பட்ட அழகமுத்து இளைப்பாறும் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன், அட்டன் – டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உப தலைவர், நகர சபை உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்துக் கொண்டனர்.

– க.கிஷாந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen