மலையகம்
அட்டன் நகர் பகுதியில் மண் சரிவு அபாயம்
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையைக்காரணமாக மண் சரிவு அபாய நிலைமை காணப்படுகின்ற நிலையில் .இன்று காலை அட்டன் நகரின் இரண்டாவது பிரதான வீதியில் மக்கள் நடமாடும் பகுதியில் மண்மேடு சிறிதளவில் இடிந்து வீழ்ந்துள்ளது.
எனவே அந்த நடைப்பாதையில் மக்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்த படுகின்றது.
அந்த பகுதி பொதுமகன் ஒருவரால் தற்காலிகமாக குறித்த பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
எனவே அதிக மக்கள் பயன்படுத்தும் இப்பகுதியினை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பபை வழங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் -சரத்