செய்திகள்

அட்டன்-வாகன விபத்து உப காவல்துறை பரிசோதகர் உயிரிழப்பு..

டி.சந்ரு

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் அட்டன் பொலிஸ் நிலைய உப காவல்துறை பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை (05) 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

அட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com