...
செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலுனர்களுக்கான பதிவு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2019-2021ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலுனர்களுக்கான பதிவு இன்று (15) புதன்கிழமை நடைபெறவுள்ளது.

 அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக 2018ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, புதிய பயிலுனர் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

.ஆரம்ப நெறி கற்கை நெறிக்கு 84 பயிலுனர்களும், கணிதம் 18 பயிலுனர்களும், இஸ்லாம் 25 பயிலுனர்களும், விஞ்ஞானம் 15 பயிலுனர்களும், வர்த்தக கணக்கீடு 18 பயிலுனர்களும், விசேட கல்வி 15 பயிலுனர்கள் அனுமதிக்கப்படடுள்ளதாக பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

இணைய வழி ஊடாக 03 வாரகால திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கான கடிதங்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களுடன் குறித்த நேரத்திற்கு சமுகமளிக்க வேணடும், .

கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்பட்டு வந்த அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மீள கல்வி நடவடிக்கைகளுக்காக இம் மாதம் 22ம் திகதி கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen