உலகம்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் கொவிட் கட்டுப்பாடுகளை நீடிக்கின்றது.

சிட்னியிலிருந்து பின்தங்கிய பகுதிகளுக்கும் வைரஸ் தொற்று துரிதமாக பரவிவரும் நிலையில் அரசாங்கம் கொவிட் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சிட்னியிலிருந்து ஒருவர் பிரொன் பே பகுதிக்கு சென்றதன் பின்னர் அங்குள்ளவர்களை கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் நியூ சவுத் வேல்ஸில் 283 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இந்த எண்ணிக்கை நேற்றைய தினம் 262 ஆக பதிவாகியிருந்தது.

7வது வாரமாகவும் சிட்னியில் முடக்கம் தொடரும் நிலையில் நியூசவுத் வேல்ஸில் டெல்டா பிறழ்வு  வேகமாக பரவியுள்ளது.

இதேவேளை விக்டோரியாவில் புதிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆக பதிவான நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்ப்பதாக நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை பிரிஸ்பேர்னில் இன்றைய தினம் நான்கு புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தடுப்பூசி செயற்பாடுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மொரிஸன் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார்.16 வயதுக்கு மேற்பட்ட 22 வீதமானவர்களுக்கு இதுவரை நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த காலாண்டில் சிட்னியின் பொருளாதாரத்தில் 2ரில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button