செய்திகள்

அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்.!

நாள் ஒன்றில் அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், 2 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்க பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 மற்றும் 869 ரக விமானங்கள் பிஜீங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ​நாட்டில் இதுவரை 25 இலட்சத்து 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 9 இலட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button