காலநிலைசெய்திகள்

அதிகூடிய மழைவீச்சி பொது மக்கள் அவதானம் !

இன்று மாலை மூன்று மணியுடன் நிறைவுபெற்ற 07 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 110 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிரிந்திவெல பகுதியில் பதிவாகியுள்ளது.

கிரிந்திவெல , கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினப்புரி ஆகிய பகுதிகளில் இன்று பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கேகாலையில் 89 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் , அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் 87 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

பலத்த மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது

இதேவேளை, பதுளை , இரத்தினப்புரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

Back to top button
image download