செய்திகள்

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து..

இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுவருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பஸ்களும், 21 ரெயில்களும் மற்றும் 1,800 தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button