மலையகம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

 

பதுளை மகளிர் தமிழ் பாடசாலையின் அதிபர் அவமானப்படுத்தப்பட்டமைக்காக ஊவா முதலமைச்சர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, கல்வி மற்றும் மனிதவள கண்காணிப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினால், 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவற்துறையிடம் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானால் கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

நன்றி-5 வரி செய்திகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button