...
செய்திகள்

அதிபர் ஆசிரியர்களின் வேதன ஆர்ப்பாட்டம் இன்று பதுளை மாவட்டத்தில்

அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டைத் தீர்க்க கோரி நாடாளாவிய ரீதியில் இன்று பதுளை மாவட்டத்தின் ஊவா மாகாண சபைக்குக்கு முன்பாகவும், பசறை, ஹாலிஎல, லுணுகல, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான நகரங்களில்
அதிபர் – ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்றைய பாடசாலை கற்பித்தல் – கற்றல் செயற்பாட்டு கடமைகளை நிறைவு செய்து விட்டு தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
பசறை நகர பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் பசறை பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்குபற்றி தமது வேதன முரண்பாட்டைத் தீர்க்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen