...
செய்திகள்பதுளைமலையகம்

அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டை நீக்குமாறு கோரி பெற்றோர்கள் பதுளை மாவட்டத்தின் பல பிரதான பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டை நீக்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி பெற்றோர்கள் பதுளை மாவட்டத்தின் பல பிரதான பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

பசறை, லுணுகல, கோணக்கலை, பதுளை, ஹாலிஎல உள்ளிட்ட பிரபல நகர மற்றும் கிராம மட்டத்தில் பெற்றோர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியும் அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கம் முன்வைத்துள்ள வேதனமுரண்பாட்டை
தீர்ப்பதற்கான கோரிக்கைகளுக்கு அரசு நியாயமான உரிய தீர்மானம் மேற்கொள்ளுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதிபர் – ஆசிரியர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen