...
செய்திகள்

அதிபர் ,ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தொடர்பில் சௌமிய பவனில் கலந்துரையாடல்

இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் , இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை (03/11)  கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்றது. 

சந்திப்ன் போது ஆசிரியர் தொழிற்சங்க பிரச்சனைகளை விரைவில் தீர்த்து தரும்படி இராஜாங்க அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

 குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செலுத்துவதாக இதன் போது இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் ஆசிரியர் தொழிற் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen