...
செய்திகள்நுவரெலியா

அதிபர் , ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிபெற்றோர்கள் நுவரெலியாவில் போராட்டம்

அதிபர் ,ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்கும் படியும் ,பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு கோரியும் இன்று 03ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

குறித்த ஆர்பாட்டத்தை 200இற்கு மேற்பட்ட பெற்றோர்கள் இணைந்து முன்னெடுத்தனர் .கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அதிபர்,ஆசிரியகளின்  சம்பளப்  முரண்பாட்டினை தீர்த்தல் ,கொத்தலாவலை சட்டத்தை வாபஸ் பெறல், இணையவழிக் கல்விக்குத் தேவையான வசதியினை மாணவர்களுக்கும் , அதிபர் , ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் போன்ற முக்கியமான அம்சங்களை முன்வைத்து இப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen