அரசியல்செய்திகள்மலையகம்

அத்தாவுல்லாவுக்கு எதிராக கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்?

மலையக மக்களை அவமானப்படுத்தும் சொற்பிரயோகத்துடன் வர்ணித்த தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அத்தாவுல்லாவுக்கு எதிராக கொழும்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்தது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டிருந்த அத்தாவுல்லா, மலையக மக்களை அவமானப்படுத்தும் வகையிலான சொற்பதத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லா மீது அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், குவளையிலிருந்த தண்ணீரை வீசியெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லாவை கண்டித்தும், அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியும் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

நன்றி truenews.lk/

Related Articles

Back to top button
image download