...
செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து பல இடங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது.

இதற்கமைவாக, மகரகம, கிரிபத்கொடை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்தோடு, பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல், சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen