செய்திகள்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான அறிவித்தல்.!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நிமித்தம் வேறொரு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமாயின் தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ளவும் உறவினர்களைப் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் கடமையின் நிமித்தம் பயணிக்கும் போது தமது நிறுவன தலைவரால் வழங்கப்படும் கடிதம் ஒன்றை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com