செய்திகள்

அத்தியாவசிய சேவைகளுக்கு இன்று முதல் விஷேட இலக்கம்

மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்காக 1965 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் செயலகத்தினூடாக இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை 24 மணித்தியாலங்களும் இந்த துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்கமுடியும். துரித தொலைபேசி இலக்கதிற்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை மாவட்ட அவசர அழைப்பு பிரிவிற்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய மக்களின் சிக்கல்கள் தொடர்பில் அறிவிக்க அனைத்து மாவட்ட செயலகங்களிலும் அவசர அழைப்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க பொருளாதார வலுவூட்டல் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

Image

Related Articles

Back to top button