செய்திகள்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், துறைமுகங்கள், விவசாயத்துறை மற்றும் ஏற்றுமதி தொழிற்றுறை உள்ளிட்டவற்றுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும். மக்களின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிப்பதற்கான வேலைத் திட்டத்திற்காக அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஏனைய செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Related Articles

Back to top button