...
செய்திகள்

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்..

சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (27) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலைகளை அதிகரிக்குமாறு, இந்த பொருட்களை இறக்குமதி செய்வோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த கோரிக்கை தொடர்பில் வாழ்க்கை செலவு தொடர்பான  அமைச்சரவை இணைக்குழு கடந்ர வாரம் கூடி ஆராய்ந்தது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 550 ரூபாவாலும், சீமெந்தின் விலையை 50 ரூபாவாலும், கோதுமா மாவின் விலையை 10 ரூபாவாலும் அதிகரிக்க கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள், இன்று (27) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டு, இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது பால்மாவுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவி வருகின்றது.

துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பால்மாவை விடுவித்துக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Source – Trunews

Related Articles

Back to top button


Thubinail image
Screen