...
செய்திகள்

அநுராதபுரத்தில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.

அநுராதபுரம் – திரப்பனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முரியாகல்ல பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டு துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குளக்கட்டொன்றுக்கு அருகில் மூவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்களில் இருவர் கட்டுத்துப்பாக்கி வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக ஊருக்குள் ஓடிச் சென்ற மற்றைய நபர், வேறொரு கட்டுத் துப்பாக்கியில் சிக்கி  காயங்களுக்குள்ளான நிலையில் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து சந்தேகத்துக்குரிய சில பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் மீதான பிரேத பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறை குற்றப் பிரிவு மற்றும் திரப்பனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen