செய்திகள்

அனர்த்த இழப்பீடு கிடைக்கவில்லையா.? இதோ தீர்வு

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள், உயிர் மற்றும் சொத்து இழப்புக்களுக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

குறித்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படும். அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகிய மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அனர்த்தத்தினால் மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com