காலநிலைசெய்திகள்மலையகம்

அனர்த்த எச்சரிக்கை காரணமாக, நமுனுகுல – தனக்கும்பர நடுக்கணக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் தோட்ட வைத்தியசாலையில் தஞ்சம்.

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை காரணமாக, நமுனுகுல – தனக்கும்பர
நடுக்கணக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள்
தன்னக்கும்பர தோட்ட வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

14 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் இவ்வாறு தற்காலிக முகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்காலிக முகாமில் தங்கியுள்ள இவர்களுக்கு, படல்கும்பர பிரதேச சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் நேற்று வழங்கிய உணவு பொருட்கள் இன்று தீர்ந்துள்ளதாகவும் இவர்களுக்கான உதவிகள் பிரதேச செயலகத்தால் கிடைக்கப்பெறவில்லை என இம்மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

உரிய அதிகாரிகள் இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை செய்துதருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

-நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download