அரசியல்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
சிஷேல்ஸ் நாட்டுக்கு 3நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் சுகாதார சேவைகள் என்பவற்றை விரைந்து பெற்றுக் கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுச் செல்ல, முப்படைகளின் உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு, பாதுகாப்பு ஊடக பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.