செய்திகள்

அனலைதீவு பகுதியில் 344 கிலோ கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம், அனலைதீவை அண்டிய கடற் பகுதியில் கடற்படையினரால் மேற்கொளாளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 344 கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளுடன் மூவர், காங்கேசன்துறை கடலில் வைத்து கைது செய்யப்பட்டுளள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகில் 11 பொலித்தீன் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34, 38 வயதுடைய யாழ்ப்பாணம் – குருநகர், நாச்சிக்குடா, மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button