செய்திகள்பதுளைமலையகம்

அனுமதி பத்திரம் இன்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்பட்ட நபர் கைது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெமேரியா பகுதியில் வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் டீசல் விற்பனை செய்வதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் டெமேரியா பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் வாகனம் பழுதுபார்க்கும் இடத்தை சுற்றிவளைத்த போது டீசல் விற்பனையில் ஈடுபட்டிருந்த 40 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 60 லீற்றர் டீசலையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button