செய்திகள்

அனுராதபுரம் சிறைசாலை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு நியமனம்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த குழு சுயாதீனமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும், அதனை ஆதாரமாக கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கபட்ட கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் நீதியமைச்சர் அலிசப்ரி இதன்போது  தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen