...
செய்திகள்

அனுராதபுரம்- தேவநம்பியதிஸ்ஸபுர- நீராவியடி- அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

மூத்தசிவன், எல்லாளன் ஆண்ட எங்கள் பூமி
மூத்த தமிழ்க்குடி மக்கள் வாழ்ந்த வளப்பூமி
இப்புனித பூமியிலே வந்தமர்ந்தாள் அன்னை முத்துமாரி 
அவளருளைப் பெற்றிடவே பணிந்து நிற்போம் நாங்கள் 
அனுராதபுர நகருக் கண்மையிலேயுள்ள அன்னை திருக்கோயில் 
அருள் தந்து நம்மைக் காக்கும் அற்புதக் கோயில் 
சோர்வகற்றி எழுச்சி தரும் மாரியம்மன் கோயில் 
அவளருளைப் பெற்றிடவே உணர்வு கொள்வோம் நாங்கள் 
தேவநம்பியதிஸ்ஸபுர பகுதி காட்சி தரும் கோயில் 
தேன் மதுரத் தமிழ் ஒலிக்கும் நமது திருக்கோயில் 
தொன்று தொட்டு நாமடைந்த துயரங்கள் கண்ட கோயில் 
தொடராது அவை அடக்க அன்னையைச் சரணடைவோம் நாங்கள்
நீராவியடி தமிழ் மண்ணில் எழுந்துள்ள கோயில் 
நிம்மதியை நாம் பெறவே அருளுகின்ற கோயில் 
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கோயில் 
எழுச்சி பெற அன்னையவள் அடிபணிவோம் நாங்கள் 
வளங்கொண்ட பெருநிலத்தில் அமைந்த திருக்கோயில் 
வலிமை தந்து எங்களுக்கு வலுவூட்டும் கோயில் 
மாமன்னன் எல்லாளன் சமாதியை அருகு கொண்ட கோயில் 
எம்முரிமை காத்திடவே அன்னையடி பற்றிடுவோம் நாங்கள் 
தமிழொலித்த வளநிலத்தில் தோன்றியுள்ள கோயில் 
அன்னை முத்துமாரி என்ற பெயர் கொண்ட கோயில் 
அதர்மத்தை வேரறுக்க அன்னை அமர்ந்த கோயில் 
நித்திய வளவாழ்வை அன்னையவள் எமக்களிப்பாள் நம்பிடுவோம் நாங்கள். 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen